நடமாடும் டெலிவெரி ரோபோக்களை அதிகளவில் பயன்படுத்த ஜெ.டி.காம் திட்டம்

0 1570
நடமாடும் டெலிவெரி ரோபோக்களை அதிகளவில் பயன்படுத்த ஜெ.டி.காம் திட்டம்

சீனாவின் பிரதான ஈ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஜெ.டி.காம் ,பொருட்களை டெலிவெரி செய்யும் நடமாடும் ரோபோக்களை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

கோவிட் ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுடன் வாடிக்கையாளருக்கு ஏற்படும் நேரடி தொடர்பை தவிர்க்கும் வகையில் சேவை வழங்குவது தொடர்பான தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற தொடங்கியது. இதனால் போட்டி நிறுவனங்களான அலிபாபா, மெய்துயன் உள்ளிட்டவையும் இந்த வகை ரோபோக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே 200 ரோபோக்களை டெலிவெரி சேவைக்காக விட்டுள்ள ஜெ.டி.காம், இந்தாண்டு இறுதிக்குள் ஆயிரம் ரோபோக்களை விட திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments