1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

0 4174
1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன் மீதான இறுதி முடிவை, ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பின் போது முதலமைச்சர்வெளியிடுவார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து, மருத்துவத் துறை வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் முதல் கட்டமாக 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்று ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதிலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments