25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கழுகின் படிமங்கள் கண்டுபிடிப்பு

0 1222

ஆஸ்திரேலியாவில் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கழுகின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சவுத் ஆஸ்திரேலியப் பகுதியில் உள்ள பின்பா என்ற ஏரியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கடந்த சில வாரங்களாக ஆய்வு நடத்தினர். அப்போது வரலாற்று முந்தைய காலத்தில் வாழ்ந்த கழுகு ஒன்றின் கால் எலும்பு உள்ளிட்ட படிமங்கள் கண்டறியப்பட்டன.

இந்தக் கழுகு ஃபிளமிங்கோ பறவைகள் மற்றும் கோலா கரடிகளை உணவாகக் கொண்டு வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கழுகு ஆர்கெஹியராக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் என்ற புதிய வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments