தங்கள் ஊருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் ,கைப்பட மனு எழுதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த 9ஆம் வகுப்பு மாணவி

0 2401

தங்கள் பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தன் கைப்பட மனுவை எழுதி தேனி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்தார்.

போடேந்திரபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா என்ற அந்த மாணவி, தேனியிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். போடேந்திரபுரத்திலிருந்து காலை 8 மணிக்கு ஒரு பேருந்து தேனி செல்வதாகவும் அதனை தவறவிட்டால் 9.30 மணிக்குத்தான் அடுத்த பேருந்து வரும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ள மாணவி, பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பு மக்களும் 8 மணி பேருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி கொடுத்த மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்தார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments