நயன்தாராவும் 60 வயது ரசிகரும்..! ஒரு வழியா ஆசை நிறைவேறியது

0 6971
திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் நயன்தாராவின் தரிசனம் கிடைத்ததால் குடும்பத்தை விட்டு விட்டு நயந்தராவின் பின்னால் ஓடிவந்த 60 வயது ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் நயன்தாராவின் தரிசனம் கிடைத்ததால் குடும்பத்தை விட்டு விட்டு நயந்தராவின் பின்னால் ஓடிவந்த 60 வயது ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை நயன்ந்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஜோடியாக வெளியே வந்தனர். அவரை பார்ப்பதற்கும் அவருடன் செல்பி எடுப்பதற்கும் பலர் முண்டியடித்தனர். தங்கள் முக கவசங்களை கழற்றிவிட்டு இருவரும் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

கூட்ட நெரிசலில் நயந்தாராவை யாரும் நெருங்கிவிடாதபடி அவருடன் வந்தவர்களும், போலீசாரும் பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச்சென்றனர். இருந்தாலும் வழிய நெடுக சில ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டே சென்றார்.

அப்போது தமிழகத்தில் இருந்து குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமிகும்பிட சென்றிருந்த 60 வயது ரசிகர் ஒருவர், குடும்பத்தினரை விட்டு விட்டு நயந்தாராவை பார்த்ததும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள எத்தனித்தார் ஆனால் நடக்கவில்லை.

இதையடுத்து எப்படியாவது புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற லட்சிய வெறியுடன் நயந்தாராவுக்கு பின்னால் ஓடிவந்த அந்த பெரியவர் ஒரு கட்டத்தில் அவர்களிடம் தனது செல்பி ஆசையை தெரிவித்தார். வியப்புடன் பார்த்த விக்னேஷ் சிவனும், நயந்தாராவும் 2 அடி தள்ளி நின்று பெரியவருடன் செல்பி எடுத்துக் கொள்ள அனுமதித்தனர்.

மிகுந்த பயபக்தியுடன் நயந்தாரா அருகில் நின்று அந்த பெரியவர் போஸ் கொடுக்க ,அவருக்கு பின்னால் ஓடிவந்த இளைஞர் செல்போன் மூலம் குழு செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் தனது வாழக்கை லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியில் அந்த பெரியவர் அங்கிருந்து சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments