தேர்வுக்கு முன் மாயமான மருத்துவக் கல்லூரி மாணவன்..சுற்றுலா செல்வதாக கடிதம் , போலீசார் விசாரணை

0 2422

சென்னையில் சுற்றுலா செல்வதாக கடிதம் எழுதி விட்டு ஹாஸ்டலை விட்டு வெளியேறிய மருத்துவக் கல்லூரி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பதியைச் சேர்ந்த சாய் பிரகீத் சிந்தா சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாமண்டு படித்து வருகிறார். இன்று தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், நேற்று இரவு விடுதியை விட்டு வெளியே சென்ற சாய் பிரகீத் வெகு நேரமாகியும் விடுதிக்குத் திரும்பாததாகக் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில், சாய் பிரகீத் தான் சுற்றுலா செல்வதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தனது பிறந்த நாளின் போது திரும்பி வருவதாகவும் எழுதி வைத்து விட்டுச் சென்ற கடிதம் சிக்கியது.

எனினும், அது மாணவர் சாய் பிரகீத் எழுதிய கடிதம்தானா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments