படகு மூலம் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா...யூடியூபருக்கு வலை

0 3997

நாகை மீனவன்” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் நபருக்குச் சொந்தமான படகில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட யூடியூபரைத் தேடி வருகின்றனர்.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படவிருப்பதாக அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் இறங்கிய அதிகாரிகள், படகு ஒன்றில் கஞ்சா மூட்டைகள் ஏற்றப்படுவதைப் பார்த்து, அங்கு விரைந்தனர். அதிகாரிகளைப் பார்த்ததும் கடத்தல் கும்பல் தப்பியோடியது. 280 கிலோ கஞ்சாவையும் படகையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

அந்தப் படகு, “நாகை மீனவன்” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் குணசீலனுக்குச் சொந்தமானது என்று கூறப்படும் நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments