ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி... 25 ஆயிரம் பார்வையாளர்களை அனுமதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

0 1545

ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மைதானத்தின் முழுக் கொள்ளளவான 25 ஆயிரம் பார்வையாளர்களை அனுமதிக்கும்படி ஐக்கிய அரபு அமீரக அரசிடம் இந்தியக் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இருநாடுகளிலும் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. நவம்பர் 14ஆம் நாள் துபாயில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி மைதானத்தின் முழுக் கொள்ளளவுக்கும் பார்வையாளர்களை அனுமதிக்கும்படி இந்தப் போட்டியை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி கோரியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments