சாயப்பட்டறை கழிவுநீர் : விஷம் பாய்ந்தது போல நுரைதள்ளும் நொய்யல்

0 2057
உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில், சாயப்பட்டறை கழிவு நீர் கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. காவிரியில் கலந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள நொய்யல், சாயக்கழிவுகளால் விஷம் பாய்ந்ததுபோல, கருநிறத்தில் நுரை தள்ளிப் பாய்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில், சாயப்பட்டறை கழிவு நீர் கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. காவிரியில் கலந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள நொய்யல், சாயக்கழிவுகளால் விஷம் பாய்ந்ததுபோல, கருநிறத்தில் நுரை தள்ளிப் பாய்கிறது.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பாய்ந்து நொய்யல் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சுமார் 120 கி.மீ நீளம் கொண்ட நொய்யல், கரூர் மாவட்டத்தில் சுமார் 50 கி.மீ தூரம் பாய்கிறது, அங்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் வசதி பெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறை கழிவு நீர், நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் கலந்து, நொய்யலை நஞ்சாக்கியதால் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசனப்பரப்பு பாழ்பட்டது.

விவசாயிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று, கேடு விளைக்கும் கழிவு நீரை ஆற்றில் வெளியேற்றக் கூடாது, ஆபத்தான கழிவுகளை நீக்கி ஜீரோ டிஸ்சார்ஜ் செய்து நீரை வெளியேற்ற வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வழங்க என தீர்ப்பு பெற்றனர். இந்நிலையில் நொய்யல் ஆற்றில் அவ்வப்போது சாயப்பட்டறை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றுவது மீண்டும் தொடர்கதையாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

நீரின் நிறம் கறுப்பு என்றால் நம்புவீர்களா, ஆனால் நொய்யலில் கருநிறத்தில் நீர் ஓடுகிறது. ஆபத்தை அறியாமல் குளிப்பவர்கள், நீரை குடிப்பவர்களின் கதி என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.

மஞ்சள், கரும்பு, நெல் உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைந்த நிலங்கள் மலட்டுத் தன்மை கொண்டவையாக மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நொய்யல், காவிரியில் கலந்து ராமநாதபுரம், திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் வழியாக பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் தெரிவிக்கின்றனர்.

சாயக்கழிவில் உள்ள ரசாயனங்கள் மற்றும் உலோகக் கழிவுகளால் தோல் நோய்கள், கருச்சிதைவு, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments