மகனைக் கொலை செய்தவர்களை பழி தீர்க்க திட்டம்..! ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த முதியவர் கூட்டாளிகளுடன் கைது

0 1909
சென்னையில் மகனைக் கொலை செய்தவர்களை பழி தீர்ப்பதற்காக நாட்டு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த முதியவர் ஒருவர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் மகனைக் கொலை செய்தவர்களை பழி தீர்ப்பதற்காக நாட்டு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த முதியவர் ஒருவர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசிய தகவலின் பேரில், மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கும்பலை, சுற்றி வளைத்த போலீசார், 62 வயதான முருகேசன் என்பவர் உட்பட, 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு நாட்டு வெடிகுண்டு, ஐந்து பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

முருகேசனின் மகனை கடந்த மாதம் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்ததும் கொலை செய்ய முருகேசன் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments