கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன, இரு நாடுகளின் துருப்புகள்

0 2089

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அங்கு இரு நாடுகளும் தலா 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் துருப்புக்களை நிறுத்தி வைத்துள்ளன.

அங்கு அசாதாரணமான ஒரு அமைதி நிலவும் நிலையில், உயரமான மலைப்பகுதி மற்றும் ஆக்சிஜன் குறைவு காரணங்களால் இரு நாட்டு ராணுவங்களும் சுழற்சி முறையில் படை வீரர்களை நிறுத்தியுள்ளதுடன், விமானங்களையும், டிரோன்களையும் பயன்படுத்தி பரஸ்பர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், லடாக் முதல் அருணாச்சல் பிரதேசம் வரையிலான 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் அசல் கட்டுப்பாட்டு எல்லையில், சீனா புதிய விமான ஓடுதளங்களையும், ஹெலிபேடுகளையும் கட்டியுள்ளதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கூடுதல் போர் விமானங்களை நிறுத்தும் வகையில் அப்பகுதியில் உள்ள தனது விமானப்படைத் தளங்களை சீனா மேம்படுத்தி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

காரகோரம் கணவாய் முதல் பல எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினர் தங்குவதற்கான அறைகளையும் சீனா புதிதாக கட்டியுள்ளது. வான்வழித் தாக்குதல்களை தடுப்பதற்கான 2  ரஷ்ய S-400  ஏவுகணை  தளவாட அமைப்பை தனது கர்குன்சா விமானப்படைத் தளத்தில் சீனா வைத்துள்ளது.

இந்தியா அது போன்ற 4 எவுகணை தளவாட அமைப்பை ரஷ்யாவிடம் இருந்து சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments