பெண்களை கேலி செய்த புள்ளிங்கோக்களை, மரத்தில் கட்டி வைத்து ஊர் கூடி உரித்த மக்கள்.. போதும் போதும் என்ற அளவுக்கு சுற்றம்சூழ விருந்து வைத்த சம்பவம்..

0 62598
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வாகனத்தில் சென்ற பெண்களை, கேலி செய்து, சில்மிஷத்தில் ஈடுபட்ட சில் வண்டுகளை, ஊர்மக்கள் மரத்தில் கட்டி வைத்து, சுற்றம்சூழ உதை விருந்து வைத்தனர். போதும் போதும் என்ற அளவுக்கு உதை தின்ற புள்ளிங்கோக்களை போலீசார் வந்து மீட்டபோது, காலிகளை காப்பாற்ற வந்துவிட்டீர்களா என பெண்களும் பொதுமக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வாகனத்தில் சென்ற பெண்களை, கேலி செய்து, சில்மிஷத்தில் ஈடுபட்ட சில் வண்டுகளை, ஊர்மக்கள் மரத்தில் கட்டி வைத்து, சுற்றம்சூழ உதை விருந்து வைத்தனர். போதும் போதும் என்ற அளவுக்கு உதை தின்ற புள்ளிங்கோக்களை போலீசார் வந்து மீட்டபோது, காலிகளை காப்பாற்ற வந்துவிட்டீர்களா என பெண்களும் பொதுமக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், பொன்னேரி, சின்னமோட்டூர்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர், தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர், வெதரம்பட்டியில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு சரக்கு வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளனர்.

தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், இருமத்தூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் தீர்த்த நீராடிவிட்டு, ஃபுல் போதையில் டாடாஇண்டிகா காரில் 7 புள்ளிங்கோக்கள் வந்துள்ளனர்.

சரக்கு வாகனத்தில் பெண்கள் அமர்ந்து செல்வதைப் பார்த்தவுடன், சரக்கில் இருந்த புள்ளிங்கோக்கள் காரை முன்னும் பின்னும் வேகமாக ஓட்டி வித்தை காட்டியுள்ளனர். கேலி கிண்டல் செய்து கலாய்த்தபோது கடுப்பான பெண்கள் அவர்களை திட்டித் தீர்த்துள்ளனர். அப்போதும் போதை தெளியாத புல்லுருவிகள், காரை சாலையின் குறுக்கே நிறுத்தி சில்மிஷத்தில் இறங்க முயற்சித்துள்ளனர். தடுக்க முயன்ற சரக்கு வாகன ஓட்டுநரையும் தாக்கியுள்ளனர்.

இந்த களேபரத்தால் அப்பகுதி பொதுமக்கள் கூடியவுடன், சுதாரித்துக் கொண்ட 4 பேர் மட்டும் டாடா இண்டிகா காரை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர். சிக்கிய 3 பேரை மட்டும் மரத்தில் கட்டிவைத்த பொதுமக்கள் போதை தெளியும் அளவிற்கு பாடம் எடுத்துள்ளனர். அந்த வழியாக சென்ற போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார், நடந்த விவரங்களை விசாரித்துள்ளனர்.

மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த, திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர், சு.பள்ளிப்பட்டைச் சேர்ந்த கௌதம், கார்த்திக், வல்லரசு, மூன்று பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். மரண பயத்தில் இருந்த புள்ளிங்கோக்களுக்கு போலீஸ் வாகனத்தில் ஏற்றிய பிறகுதான் உயிர்வந்தது.

அப்போது, அத்துமீறி நடந்து கொண்டவர்களை காப்பாற்ற வந்துள்ளீர்களா என கேட்டு போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மூன்று பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தப்பியோடிய 4 பேரையும் கைது செய்ய வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments