அனைவருக்கும் ஹெல்த் கார்டு திட்டத்தை துவக்கினார் மோடி..

0 4263
இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை துவக்கி வைத்துள்ள பிரதமர் மோடி, அதன் வாயிலாக இந்தியா, புதிய ஒரு தனிச்சிறப்பான காலகட்டத்தில் இன்று நுழைகிறது என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை துவக்கி வைத்துள்ள பிரதமர் மோடி, அதன் வாயிலாக இந்தியா, புதிய ஒரு தனிச்சிறப்பான காலகட்டத்தில் இன்று நுழைகிறது என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை டெல்லியில் இருந்தவாறு மோடி காணொலியில் துவக்கி வைத்தார். இந்த திட்டமானது இந்தியாவின் மருத்துவ-சுகாதார வசதிகளில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வரும் என அவர் அப்போது நம்பிக்கை தெரிவித்தார்.

ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் மருத்துவ சிகிச்சை வசதிகளை பெறுவதில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தால் தீர்க்கப்படும் என மோடி கூறினார்.  ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின் தொழில்நுட்பம், வளர்ந்த நாடுகளிடம் கூட இல்லை என்பதை மோடி சுட்டிக்காட்டினார்.

கடந்த 2018 ல் தாம் துவக்கிய ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நினைவு கூர்ந்த அவர், அது மேலும் விரிவடைந்து ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டமாக உருவாகி இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பதிவகம், சுகாதாரப்பணியாளர்கள் பதிவகம் ஆகிய அமைக்கப்பட்டு நாட்டு மக்களுக்கான மருத்துவ வசதிகள் ஒருங்கிணைக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments