அனைத்து தரப்பினருக்குமான அரசாக திமுக அரசு செயல்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2050

அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை உருவாக்கி செயலாற்றி வரும்  தென்னிந்திய திருச்சபை இந்தியாவிற்கு கிடைத்த கருவூலம் என்று அவர் வாழ்த்தினார்.

திமுகவின் ஆட்சி, வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காதவர்களுக்கும் ஏற்ற ஆட்சியாக அமையும் என்று கூறிய முதலமைச்சர், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்டவற்றை  நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments