கடலூரில் சுற்றுலா மாளிகையில் அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்

0 120

சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கக் கோரி, கடலூர் சுற்றுலா மாளிகையில் அமைச்சர் எம்.சி.சம்பத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர். கடலில் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக கடந்த மாதம் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்கு வலையைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில் கடலூர் வந்த தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத்தை முற்றுகையிட்ட 4 கிராம மீனவர்கள், சுருக்கு வலை பயன்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசி சுமூகத் தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments