சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு முன்பு ஒருவர் தீக்குளிப்பு

0 3578
உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதால் அரசியல் கட்சியினர் மிரட்டுவதாகக் கூறி, முதலமைச்சர் வீட்டின் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதால் அரசியல் கட்சியினர் மிரட்டுவதாகக் கூறி, முதலமைச்சர் வீட்டின் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லம் அருகே, காலை 9.45 மணி அளவில் செனடாப் சாலையில் இருந்து சித்தரஞ்சன் சாலை சந்திப்புக்கு ஒருவர் தீக்குளித்த நிலையில் அலறல் சத்தத்துடன் ஓடி வந்துள்ளார். அங்கிருந்த போலீசார், கேனில் வைத்திருந்த குடிநீரை அந்த நபர் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

தீக்காயத்துடன் துடித்துக்கொண்டிருந்த அந்த நபரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை சந்தித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார்.

தென்காசியில் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதால் அரசியல் கட்சியினர் சிலர் மிரட்டுவதாக அந்த நபர் அப்போது புகார் மனு அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments