இதுதான் அதிர்ஷ்டமா..? கட்டுப்பாட்டை இழந்தாலும் எந்த வாகனத்தின் மீதும் மோதாமல் சாலையின் மறுபுறம் சென்ற கார்

0 2123

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாட்டை இழந்த டொயோட்டா ஹிலக்ஸ் கார் தவறான திசையில் கார்களுக்கு இடையே பாய்ந்து சாலையின் மறுபுறம் சென்ற காட்சியை ஆஸ்திரேலிய போலீஸ் பதிவு செய்துள்ளது.

இந்த வாகனத்தை பெண் ஒருவர் ஓட்டிக் கொண்டு வந்தார். டார்வின் நகரை நோக்கி செல்லும் போது கார் தனது கட்டுப்பாட்டை இழந்தது. சிக்னல் சந்திப்பு ஒன்றில் சாலையில் காத்திருந்த வாகனங்களுக்கு குறுக்காக, எந்த வாகனத்தின் மீதும் மோதாமல் சாலையின் தடுப்பை தாண்டி மறுபுறம் சென்று கட்டிடம் ஒன்றின் மீது மோதி நின்றது.

வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணும் அதில் இருந்த குழந்தை ஒன்றும் பெரிய காயங்கள் இன்றி தப்பித்து, முதலுதவிக்காக ராயல் டார்வின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments