இரு சக்கர வாகனம், ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து... 3 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு

0 3090

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மாலூரில் இருசக்கர வாகனம், ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் மாலூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த அபீத், சையப், பூவரசன் ஆகியோரின் இருசக்கர வாகனமும், பயணிகள் ஆட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆட்டோ ஓட்டுநருக்கு கைமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று பேரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments