3 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம்... பிரதமர் மோடி பயணக் களைப்பை சமாளிக்க கையாண்ட 3 யுக்திகள்..!

0 4967

அமெரிக்காவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பயண களைப்பு உள்ளிட்டவைகளை சமாளிக்க 3 யுக்திகளை கையாண்டதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

அமெரிக்காவில் 65 மணி நேரத்தை செலவிட்ட பிரதமர் மோடி, பயணக் களைப்பை உணராமல் இருக்க அடுத்தடுத்து 20 ஆலோசனை கூட்டங்களிலும், தலைவர் சந்திப்புகளிலும் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் வைத்து 4 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நேரத்திற்கு ஏற்ப தூக்க சுழற்சியை சமன் செய்து புத்துணர்வாக இருந்ததாகவும், உடலின் தட்பவெட்பம் சமனாக இருக்க அதிகமாக தண்ணீர் பருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments