இந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53 விழுக்காடு பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் - மத்திய அரசு

0 2050

இந்தியாவில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 53 விழுக்காடுக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மேற்கண்ட வயது வரம்பில் உள்ள 34 கோடியே 66 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 7 கோடியே 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு டோஸ் மருந்துகளையும் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 85 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments