ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தாலிபான்கள் கோரிக்கை

0 2989

ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்குமாறு விமான நிறுவனங்களுக்கு தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாலிபான்களின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதால், பல ஆப்கானிஸ்தான் குடிமக்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்ப முடியாமல் வெளியில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

காபூல் விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், விமான நிறுவனங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் அப்துல் கஹார் பால்கி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments