சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவை - பீகார் முதலமைச்சர்

0 1276

நாடு தழுவிய அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது காலத்தின் தேவை என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி கணக்கெடுப்பு நாட்டின் நலனுக்காக உள்ளதாக கூறிய அவர், கணக்கெடுப்புக்கு எதிரான முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பீகாரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்னையின் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments