3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை..!

0 1699

சென்னை திருவொற்றியூரில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீஞ்சூரை சேர்ந்த விக்னேஸ்வரனுக்கும், திருவொற்றியூரை சேர்ந்த காமாட்சிக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில் இவர்களுக்கு 3 வயதில் பிரியதர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், காமாட்சியுடன் சென்ற தனது குழந்தையை மட்டும் அவ்வபோது விக்னேஸ்வரன் பார்த்து  பேசி வந்துள்ளார்.

இதேபோல் நேற்று இரவும் சுமார் 12 மணி வரை பிரியதர்ஷினியுடன் செல்போனில் பேசியுள்ளார். இந்நிலையில் காலையில் விக்னேஸ்வரனுக்கு போன் செய்த காமாட்சியின் சகோதரர், பிரியதர்ஷினி உடல்நிலை சரியில்லாமல் திடீரென உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஸ்வரன் தனது குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாகவும், காமாட்சிக்கு அவரது சிறுவயது ஆண் நண்பர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவகனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார்,  குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்து காமாட்சி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை உயிரிழப்புக்கான காரணம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments