குப்பைமேட்டில் கொட்டப்பட்ட காலாவதியான சாக்லேட்டுகள், மிட்டாய்களை உண்ட 3 பசுக்கள் உயிரிழப்பு

0 3054

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குப்பையில் கொட்டப்பட்ட காலாவதியான சாக்லேட்டுகளை உண்டு 3 பசுமாடுகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வீரக்கல் புதூர் அடுத்த புதுச்சாம்பள்ளி மயானம் அருகில் பேரூராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக சிலர் இரவு நேரத்தில் வந்து இங்கு  கிலோ கணக்கிலான காலாவதியான சாக்லெட்டுகளை கொட்டிச்சென்றுள்ளனர்.

குப்பை மேட்டை ஒட்டி மேய்ந்துகொண்டிருந்த கோம்பூரான் பகுதியைச் சேர்ந்த பெரமன் என்பவரது 4 பசு மாடுகள் இந்த சாக்லேட்டுகளை தின்றதாகக் கூறப்படுகிறது.

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு,3 பசுக்கள் உயிரிழந்தன. மற்றொரு பசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments