14 வயது சிறுமியை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் தையல்காரன் கைது

0 2814

திருப்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய ஒருவன் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டான்.

ராஜாவூரைச் சேர்ந்த தையல் தொழில் செய்துவரும் சிவராஜ், 9ஆம் வகுப்பு படிக்கும் 14வயது சிறுமியிடம் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், சிறுமியிடம் நெருங்கி பழகிய போது எடுத்த போட்டோ, வீடியோக்களை வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து, சிறுமியின் தாயார் சிவராஜிடம் கேட்டபோது சிறுமியுடன் நெருக்கமாக பழகிய போது எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோக்களை காட்டி மிரட்டியுள்ளான்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments