அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு முறைகேடாக திரும்பப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு-தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் - இரகளை

0 2006

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றியத்தின் 11ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட அதிமுக வேட்பாளரின் மனு, அவருடைய அனுமதியில்லாமலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறி அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தாக்கலான மனுக்களில் திமுக தவிர்த்து மற்ற கட்சிகளின் 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதிமுக வேட்பாளர் சலேத்மேரி என்பவரது மனு உட்பட ஐந்து பேரின் வேட்பு மனுக்கள் திரும்பப் பெற்றுக்கொண்டதாகக் கூறி திமுக வேட்பாளர் அலமேலு போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments