காஷ்மீரில் பாஜக நிர்வாகியை கொன்றவன் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

0 1556

காஷ்மீரில் பாஜக நிர்வாகி, அவரது தந்தை, சகோதரரை கொன்ற நபர் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வடக்கு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.

கடந்த ஆண்டு ஜூலையில் பாஜக நிர்வாகி ஷேக் வசீம், அவரது தந்தை, சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை கொலை செய்த பயங்கரவாதி, ஞாயிறன்று நடந்த தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments