தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை..!

0 2051

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரியாம்பட்டியைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான சந்திரபோஸ், வழக்கம்போல் அதிகாலையிலேயே வியாபாராத்துக்குச் சென்றுள்ளார். காலை நீண்ட நேரமாகியும் அவரது மனைவி மகேஷ்வரி, மகன் சந்தோஷ், மகள் சௌந்தர்யா ஆகியோர் வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை என்பதால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். உள்ளே மூவரும் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளனர்.

சந்திரபோஸ் தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார் எனக் கூறப்படும் நிலையில், அதன் காரணமாக இந்த தற்கொலை அரங்கேறியதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments