அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் பெற்று மோசடி எனப் புகார்-2 ஐ.ஏ.எஸ் அகாடமி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

0 10236

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்ச ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் “நிமிர் ஐ ஏ எஸ் அகாடமி” நடத்தி வரும் ஜான்சன் என்பவரும் “அக்னி ஐ ஏ எஸ் அகாடமி” நடத்தி வரும் சிவக்குமார் என்பவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக கடலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சிலம்பரசனிடம் 10 லட்ச ரூபாய் வாங்கினர் என்று கூறப்படுகிறது.

அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பலருடன் எடுத்துக் கொண்ட போட்டோவைக் காட்டி, பணத்தை அவர்கள் வாங்கியதாகவும் ஆனால் சொன்னபடி வேலையையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்தவர்கள், ஒரு கட்டத்தில் போலி நியமன ஆணையைக் கொடுத்ததாகவும் சிலம்பரசன் போலீசில் புகாரளித்துள்ளார்.

அதனடிப்படையில் ஜான்சன், சிவக்குமார், இடைத்தரகர்கள் மனோஜ் ,ரஞ்சித் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments