இந்தியாவுடனான உறவுகள் வலுவாக, நெருக்கமாக, இறுக்கமாக இருக்கும் - ஜோ பைடன்

0 2263

இந்தியாவுடனான உறவுகள் வலுவாகவும் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் இருக்கும் எனப் பிரதமர் மோடியைச் சந்தித்த பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், கொரோனா தடுப்பு, பருவநிலை மாற்றம் ஆகியன குறித்தும் விரிவாகப் பேச்சு நடத்தினர்.

பைடனுடனான சந்திப்பு முக்கியமானது என இது குறித்துப் பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியது இந்திய - அமெரிக்க நட்புறவு வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகின் மாபெரும் ஜனநாயகத்தைக் கொண்ட இருநாடுகளும் கடினமான சவால்களைக் கூட்டாக எதிர்கொள்ள உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments