ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி .இந்திய அணி வெற்றி

0 1896

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இதன்மூலம் தோல்வியின்றி 26 போட்டிகள் வென்ற ஆஸ்திரேலியாவின் வெற்றிப்பயணத்திற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. 3 ஒருநாள், ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே ஒருநாள் தொடரை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா இழந்த நிலையில், 3ஆவது போட்டி மெக்கேவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments