தனியார் மதுபான பாரில் இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டு சேர், டேபிள்களை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி

0 2784

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியாருக்கு சொந்தமான மதுபான பாரில், மது அருந்திய இளைஞர் போதையில் அங்கிருந்த சேர், டேபிள்களை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மணப்பாறை ரயில்வே மேம்பாலம் அருகே செல்வகுமார் நடத்தி வரும் ஏசி பாருக்கு இளைஞர்கள் சிலர் மது அருந்த வந்தனர். அனைவரும் மது அருந்திய பிறகு ஊழியர்கள் பணம் கேட்டபோது, அவர்களில் ஒரு இளைஞர் பணத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது.

அதில், பார் ஊழியர்களுக்கும்- இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஒரு இளைஞர் அங்கிருந்த நாற்காலி, டேபிள்களை அடித்து நொறுக்கினார்.

இதனால் பாரில் இருந்த சிலர் அலறியடித்து ஓடிய நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments