செங்கல்பட்டு : மேல்மருவத்தூர், தண்டலம் ஊராட்சி மன்றங்களில் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வு

0 2328

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் மேல்மருவத்தூர், தண்டலம் ஊராட்சி மன்றங்களில் போட்டியின்றித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேல்மருவத்தூர் ஊராட்சியில் பங்காரு அடிகளின் மனைவி இலட்சுமியும், மாற்று வேட்பாளராக மகன் செந்தில்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

செந்தில்குமார் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றதையடுத்து இலட்சுமி போட்டியின்றித் தேர்வானார். இதேபோல் தண்டலம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு விஜயா என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் போட்டியின்றித் தேர்வானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments