சீன அரசால் 3 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கபட்ட கனடாவைச் சேர்ந்த மைகேல் கோவ்ரிக்... ஆரத்தழுவி வரவேற்ற குடும்பத்தினர்

0 1761

சீன அரசால் 3 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கபட்ட கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார். டொரோன்டோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய Michael Kovrig-ஐ, அவரது மனைவியும், சகோதரியும் ஆரத்தழுவி வரவேற்றனர்.

அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், சீனாவின் ஹூவாவே நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி Meng Wanzhou வங்கி பண மோசடி செய்ததாக 2018-ல் கனடாவின் வான்கூவர் விமானநிலையத்தில் காவலில் எடுக்கப்பட்டு அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார்.

அதற்கு பதிலடி தரும் விதமாக கனடாவை சேர்ந்த Michael Kovrig -ஐயும், Michael Spavor என்ற தொழிலதிபரையும் சீன அரசு காவலில் எடுத்தது. இந்நிலையில் ஹூவாவே நிதி அதிகாரியை அமெரிக்க அரசு விடுவித்ததையடுத்து, கனடாவைச் சேர்ந்த இருவரையும் சீன அரசு விடுவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments