வீட்டில் தனியாக இருந்த சிறுவர்களை ஏமாற்றி பணம், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்

0 1726

சென்னை ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுவர்களை ஏமாற்றி 6 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளான்.

கோணாம்பேட்டைச் சேர்ந்த நாராயணனும் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் வேலைக்குச் செல்கின்றனர். இவர்களுக்கு 10 மற்றும் 12 வயதில் 2 மகன்கள் உள்ளனர். பெற்றோர் வேலைக்குச் சென்றபின் சிறுவர்கள் இருவரும் வீட்டில் தனியே இருப்பது வழக்கம். இதனை மோப்பம் பிடித்த மர்ம நபர் ஒருவன் நேற்று மதியம் திடீரென வீட்டுக்குள் நுழைந்துள்ளான்.

“உங்கள் தந்தை எனக்குப் பணம் தர வேண்டும்” என்றும் “மகன்களிடம் வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்” என்றும் சொல்லிக்கொண்டே விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்தவன், பூட்டப்படாத பீரோவைத் திறந்து நகையையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளான்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் சிறுவர்கள் விழித்துக் கொண்டிருக்க, மிகச் சில நிமிடங்களில் தனது வேலையை முடித்துக் கொண்டு தப்பிச் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments