டாஸ்மாக் கடைக்குள் திடீரென புகுந்த கொள்ளையர்கள்...அரிவாளைக் காட்டி மிரட்டி 52 ஆயிரம் கொள்ளை

0 5143

மதுரையில் டாஸ்மாக் கடைக்குள் மது வாங்குவது போல் புகுந்து அரிவாளைக் காட்டி ஊழியர்களை மிரட்டி, 52 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செக்காணூரணி அருகே கிண்ணிமங்கலத்தில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடைக்குள் நேற்றிரவு 7 மணியளவில் மது வாங்குவதுபோல் 2 பேர் வந்துள்ளனர். திடீரென தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியை எடுத்து ஊழியரை வெட்டிவிடுவது போல் மிரட்டி, கல்லாவில் வைத்திருந்த பணக் கட்டை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

வெளியே போகும்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை கொள்ளையர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments