உத்தரப்பிரதேச அமைச்சரவை விரிவுபடுத்தப்படுவதாக தகவல்: புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு

0 1420

உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தமது அமைச்சரவையை இன்று விரிவுபடுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 6 அல்லது 7 புதுமுகங்களுக்கு அதில் வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது.

புத்தாண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள பல்வேறு ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கத்தை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவரும், கடந்த மாதம் பாஜகவில் சேர்ந்தவருமான ஜிதின் பிரசாதாவும் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு இடம் கிடைக்காத தால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாதும் அமைச்சராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments