பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. விமானப்படை உயர் அதிகாரி கைது..!

0 2875

கோயம்புத்தூரில், விமானப்படை பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், விமானப்படை உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் பந்தய சாலையில் இயங்கி வரும் இந்திய விமானப் படை பயிற்சி கல்லூரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 30 பேர் பயிற்சிக்காக வந்திருக்கின்றனர். இந்த நிலையில், அவ்வாறு பயிற்சிக்கு வந்த பெண்ணை, லெப்டினன்ட் அமிர்தேஷ் என்ற அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 10-ந் தேதி அந்த பெண் அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.

ஆனால் அவர்களது விசாரணையில் திருப்தி அளிக்காத சூழலில் பாதிக்கப்பட்ட பெண், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையருக்கு ஆன்லைன் வாயிலாக அளித்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, விமானப்படை அதிகாரி அமிர்தேஷை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments