தேவபுரீஸ்வரர் கோவிலில் மண்ணைத் தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்.. சிலிர்ப்பில் நாகை மக்கள்..!

0 3076

நாகப்பட்டினம் அருகே கோவில் புனரமைப்புப் பணியின்போது மண்ணைத் தோண்டத் தோண்ட பழங்கால ஐம்பொன் சிலைகளும் பூஜைப் பொருட்களும் கிடைத்து வருவது அப்பகுதி மக்களை சிலிர்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

கீழ்வேளூரை அடுத்த தேவூரில் உள்ளது குலோத்துங்க சோழர் கால தேவபுரீஸ்வரர் கோவில். புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் இக்கோவிலில் நவக்கிரக மண்டபம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, சிறியதும் பெரியதுமாக ஐம்பொன் சாமி சிலைகள் கிடைத்துள்ளன.

தகவலறிந்து வந்த வருவாய்த்துறையினர், மீண்டும் அந்த இடத்தைத் தோண்டத் தொடங்கினர். அப்போது அடுத்தடுத்து 13 அம்பாள் சிலைகளும், திருவாச்சியுடன் அமைந்துள்ள பிரதோஷ நாயனார் சிலை ஒன்றும் சங்கு, சூலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பூஜைப் பொருட்களும் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியை விரிவுபடுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments