டெல்லி ரோஹிணி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்..2 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்

0 1769

டெல்லி ரோஹிணி நீதிமன்றத்தில் ரவுடி ஜிதேந்தர் கோகி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ரோஹிணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜர்படுத்தப்பட்ட ரவுடி ஜிதேந்தர் கோகியை, வழக்கறிஞர் வேடத்தில் வந்த 2 பேர் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

கோகியின் பாதுகாப்புக்காக வந்த சிறப்பு படை போலீசார் திருப்பிச் சுட்டதில் கொலையாளிகள் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். முன்னதாக கோகியை கொல்ல திட்டமிட்டு, 4 பேர் சேர்ந்து மால் ஒன்றில் சந்தித்த பின்னர்  நீதிமன்றத்திற்கு வந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

அவர்களில் 3 பேர் நீதிமன்றத்திற்கு சென்று கோகியை கொல்ல வேண்டும் எனவும் உமாங் என்பவன் வெளியில் காரில் காத்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் திட்டமிட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் கோகியை கொல்லும் முயற்சியில், மூவரில் இருவர் போலீசாரால் கொல்லப்பட, காரில் காத்திருந்த உமாங்  என்பவனும்,   மற்றொருவனான வினய் என்பவனும் தப்பி சென்று விட்டனர்.

இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ரோஹிணி நீதிமன்ற வளாக 4 ஆம் நுழைவாயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான  காட்சிகளை ஆய்வு செய்து, தப்பிச் சென்ற உமாங், வினய் ஆகியோரை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments