அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி... பாஜகவினர் பிரம்மாண்ட வரவேற்பு

0 1988

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு டெல்லி விமான நிலையத்தில் பாஜகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு மேளங்கள் முழங்க, பாஜக தேசிய தலைவர் நட்டா, பொதுச் செயலாளர்கள் அருண் சிங், தருண் சுக், முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் பூங்கொத்துக்களையும், சால்வைகளையும் அளித்து வரவேற்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடைக்கு அழைத்து வரப்பட்ட மோடிக்கு ஆளுயர மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பாஜக தலைவர் நட்டா, மோடியின் தலைமையிலான இந்தியாவை உலக நாடுகள் பெருமதிப்புடன் பார்ப்பதாக பெருமிதப்பட்டார். தீவிரவாத தடுப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து பேசி, இந்தியாவை உலகின் தலைமை நாடுகளில் ஒன்றாக மோடி நிறுவிவிட்டதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments