வீடு புகுந்து திருடிய திருடன்...கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்

0 2300

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வீடு புகுந்து திருடிய திருடனை கிராம மக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கீழகாவாலக்குடியை சேர்ந்த செந்தில்குமார் வீட்டின் வாசலில் படுத்து உறங்கிய நிலையில், அவரது மனைவி சாந்தி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டிற்குள் நுழைந்த 3 திருடர்கள் வீட்டில் இருந்த ஒன்றரை சவரன் நகையை திருடியதோடு சாந்தியின் கழுத்தில் கிடந்த தாலியை பறிக்க முயன்றுள்ளனர்.

தூக்கத்தில் இருந்து எழுந்த சாந்தி கூச்சலிட்ட நிலையில், அந்த திருடர்கள் துணியை வைத்து சாந்தியின் வாயில் வைத்து அடைக்க முயன்றுள்ளனர். அப்போது குழந்தை வீறிட்டு அழுததால், வீட்டிற்குள் வந்த செந்தில்குமார் திருடர்களை பிடிக்க முயன்ற போது திருடர்கள் செந்தில்குமாரை தள்ளிவிட்டுவிட்டு வயல்வெளியில் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.

சத்தம் கேட்டு ஒன்றுகூடிய கிராம மக்கள் அந்த திருடர்களில் ஒருவனை மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து விடிய விடிய தர்ம அடி கொடுத்தனர்.

இதையடுத்து கீழ்வேளூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் கிராம மக்களிடமிருந்து திருடனை மீட்டு, அவனிடமிருந்து தங்க நகைகள், பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில் கிராம மக்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் கீழ்வேளூர் அருகே உள்ள வடக்காலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் என்பது தெரியவந்துள்ளது மேலும் தப்பிச் சென்ற மற்ற இரு திருடர்கள் குறித்து போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments