செங்கல்பட்டில் பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி பெண்ணிடம் இருந்து சுமார் 85 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு.. 4 பேர் கைது

0 8571

செங்கல்பட்டில் பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி பெண்ணிடம் இருந்து சுமார் 85லட்சம் ரூபாய் பணம் பறித்த 4 பேர் கொண்ட கும்பல், மோசடி பணத்தில் தனியாக வீடு வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கன்னடபாளையத்தைச் சேர்ந்த அந்தோனி அம்மாளின் சகோதரிகள் இருவரும் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்த அந்தோனி அம்மாள் கடந்த 2018ஆம் ஆண்டு தெரிந்த நண்பர் மூலம் பில்லி, சூனியம் நீக்க மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்பவரை அணுகியதாக கூறப்படுகிறது.

அந்தோனி அம்மாளின் இரண்டு சகோதரிகளையும் மீண்டும் கணவர்களுடன் சேர்ந்து வாழ வைப்பதாக கூறி, சிறுக சிறுக பணம் பறித்த பாத்திமா, வாங்கிய பணத்துக்கு அவ்வப்போது அந்தோனி அம்மாளின் வீட்டுக்கு வந்து, முட்டை, எலுமிச்சைபழத்தை வைத்து புரளி வித்தை காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.

3 வருடங்களுக்கு மேல் ஆகியும் பாத்திமாவின் பரிகார பூஜைகள் பலிக்காததால் சந்தேகமடைந்து அந்தோனி அம்மாள் விசாரித்த போது, தாம் ஏமாற்றப்பட்டதும், மோசடி செய்த பணத்தில் பாத்திமாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து இரும்புலியூரில் சொந்தமாக வீடு வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பாத்திமா அவரது தம்பி, தங்கை என 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments