கிருஷ்ணகிரியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 6671

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து சுமந்து என்பவர் ஓசூர் நோக்கி ஓட்டிச் சென்ற கார், எதிர்பாராமல் எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வின்சென்ட் கோபி என்பவர் அலட்சியமாக சாலையை கடந்து வளைந்ததை எதிர்பாராத சுமந்து, அதன் மீது மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாலைவிபத்தில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கார்கள் சுக்குநூறாக நொறுங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments