இந்திய பயணியர் விமானங்களுக்கான தடையை நீக்கியது கனடா

0 1458

இந்திய பயணியர் விமானங்களுக்கு ஒரு மாத காலமாக விதிக்கப்பட்டிருந்த தடையை கனடா நீக்கி உள்ளது.

இதை அடுத்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தியர்கள் கனடாவுக்கு நேரடியாக பயணம் செய்யலாம். நேரடி விமானங்களில் செல்பவர்கள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள Genestrings ஆய்வகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு 18 மணி நேரத்திற்குள்ளாக இந்த சோதனையை செய்து கொள்வது அவசியமாகும். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஆய்வகத்திலும் சோதனை செய்து அதன் சான்றிதழை அளித்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் இருந்து ஏர்கனடா தனது விமானங்களை 27 ஆம் தேதி முதலும், ஏர் இந்தியா வரும் 30 ஆம் தேதி முதலும் இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments