தமிழகம் முழுவதும் இன்று 3-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.!

0 1719

தமிழகம் முழுவதும் 3-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது

இதற்காக மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களின் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தற்போது 29 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்திருக்கிறது.

அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் என்ற நிலை ஏற்படும். இந்த முகாம்கள் காரணமாக நாளை மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறாது.

சென்னையில் 200 வார்டுகளில் மொத்தம் 1600 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சியின் இணைதளத்தில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நடைபெற்ற கடந்த இரு தடுப்பூசி முகாம்களிலும் இலக்கை விட கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments