வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் "குலாப்"புயலாக மாறியது - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 3330

ங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குலாப் புயலாக வலுப்பெற்றதுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.

இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில்  மேற்கு நோக்கி நகர்ந்து  ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கிலும்  தென்கிழக்கே 370 கி.மீ தொலைவிலும்,  ஆந்திரமாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே 440 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை இடையே அதாவது கலிங்கப்பட்டினத்திற்கும் கோபால்பூருக்கு இடையே கரையைக் கடக்கும் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 75 கி.மீ முதல் 85 கி.மீ வேகம் வரையும் அவ்வப்போது 95 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments