நள்ளிரவில் செல்போனில் ரகசிய பேச்சு... தட்டிக்கேட்ட கணவனுக்கு கத்திக்குத்து... காதல் மனைவி அட்டகாசம் !

0 5967

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் கணவனை நெஞ்சில் கத்தியால் குத்திய மனைவி, மாமியாரையும் கடித்து வைத்ததில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று காதல் செய்த கணவன், நெஞ்சில் உதிரம் வடிய, மனைவியிடம் இருந்து உயிர்பிழைக்க எப்படியாவது டைவர்ஸ் வாங்கித் தரவேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி பாரீஸ் நகரைச் சேர்ந்த இலக்கியா, திருவிழாக்களில் மேடைகளில் ஆடும் கலைஞர்களுக்கு மேக்அப் போடும் தொழில் செய்துவந்துள்ளார். அப்படி ஒரு மேடை நடன கோஷ்டியோடு, சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமத்திற்கு வந்தபோது, இலக்கியா மீது அந்த ஊரைச் சேர்ந்த பாலமுருகன் காதல்வயப்பட்டுள்ளார்.

ஜாதி பார்க்காமல் இலக்கிய காதல் செய்த இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு தர்ஷனா என்ற 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. ஓராண்டுக்குப் பிறகு காதல் கசந்து, கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு, அடிதடி, குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டு, இலக்கியா தருமபுரியிலும், பாலமுருகன் எடப்பாடியிலும் மாறிமாறி காவல் நிலையங்களில் புகார் கொடுத்து, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் கணவன் வீட்டிற்கு பெண் குழந்தையுடன் திரும்பிய இலக்கியா, இனிமேல் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன், புகார்களை வாபஸ் பெற்று சந்தோஷமாக குடும்பம் நடத்தலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், மனைவி இலக்கியா செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய்? என கணவன் பாலமுருகன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்படித்தான் பேசுவேன் என இலக்கியா கூறவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, இலக்கியா காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து சரமாரியாக பாலமுருகன் நெஞ்சிலேயே குத்தியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த மாமியார் கையைக் கடித்து வைத்த இலக்கியா, இன்றைக்கு நீ தப்பித்தாலும், உன் உயிர் என் கையில் என பாலமுருகனை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று காதல் செய்த பாலமுருகன், நெஞ்சில் உதிரம் வடிய, எப்படியாவது அரசாங்கம் டைவர்ஸ் வாங்கித் தரவேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

வாழ்வதாகச் சொல்வி வந்த மனைவி, கொலை செய்ய முயற்சித்ததாக கூறிய பாலமுருகன், கோவை சரளாவிடம் சிக்கி சின்னாபின்னமான வடிவேலு போல, அரசாங்கம்தான் இலக்கியாவுக்கு சரியான தண்டனை வாங்கித்தர வேண்டும் என ஆற்றாமையோடு வலியுறுத்தியது இயலாமையின் உச்சம்.

புகாரின்பேரில், காதல் கணவனை கத்தியால் குத்தியதாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இலக்கியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலமுருகனுகனுக்கும், அவரது தாயாருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments