சிவில் சர்வீஸ் தேர்வில் 750 -வது இடம் பிடித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

0 2936

சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 750வது இடத்தை பிடித்த கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித்குமாருக்கு டுவிட்டர் மூலம் தமிழக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பீளமேடு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் -  அமிர்தவள்ளி தம்பதியின் 2வது மகன் ரஞ்சித்குமார், பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உடையவர். 

மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துள்ள அவர், கடந்த 2 வருடங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், தனது மகன் ரஞ்சித்குமார் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments