உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற காலக்கெடு முடிவு.!

0 1880

ள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிந்ததையடுத்து வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு 97 ஆயிரத்து 831 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

28 மாவட்டங்களில் நடைபெறும் தற்செயல் தேர்தல் பதவியிடங்களுக்கு இரண்டாயிரத்து 547 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் தகுதியில்லாத மனுக்கள் பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டன.

போட்டியில் இருந்து விலகுவோர் மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு  பிற்பகல் மூன்று மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்துப் போட்டியில் உள்ள வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments